+91 88703 26229 secretary@kjkparty.com
மக்கள் குறைதீர்ப்பு மையம்

கொங்குநாடு ஜனநாயக கழகம் — எங்களை பற்றி

மக்களாட்சி, விவசாய வளர்ச்சி, சமச்சீரான பிராந்திய கட்டமைப்பு

இயக்க உருவாக்கம்

மக்களின் உரிமைக்கான சமரசமற்ற குரல்

கொங்குநாடு ஜனநாயக கழகம் பிராந்திய சுயமரியாதை, தொழில் துறை மறுமலர்ச்சி, மற்றும் உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ஜனநாயக இயக்கம் ஆகும்.

நதிநீர் படுகைகள் பாதுகாப்பு, விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை, சிறு குறு நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் ஊழலற்ற மக்களுக்கான நிர்வாகத்தை உறுதி செய்ய களப்பணியாற்றி வருகிறோம்.

அதிகாரப் பரவலாக்கல் கோட்பாட்டின் அடிப்படையில், அடிமட்ட பஞ்சாயத்து அமைப்புகள் முதல் சட்டமன்றம் வரை மக்களின் குரல் வலுவாக ஒலிக்கச் செய்வதே நமது இயக்கத்தின் முதன்மை நோக்கமாகும்.

இயக்க மாநாடு

தொலைநோக்கு பார்வை (Vision)

சுயசார்பு கொண்ட, சமூக நல்லிணக்கமும் சமத்துவமும் நிறைந்த சமூகத்தை உருவாக்குதல். சூழலியல் சமநிலையை உறுதி செய்து, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகளையும், தூய்மையான மக்கள் நிர்வாகத்தையும் வழங்குவதே எமது இலட்சியம்.

செயல் திட்டம் (Mission)

அரசியலமைப்புச் சட்டத்தின் வழியில் அமைதியான மக்களாட்சிப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லுதல்; கிராமப்புறக் கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல்; மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் வெளிப்படைத்தன்மையை முழுமையாக உறுதிப்படுத்துதல்.

அடிப்படை தத்துவங்கள்

நமது தலையாய கொள்கைகள்

நதிநீர் மற்றும் விவசாயப் பாதுகாப்பு

பாசன வாய்க்கால்கள் தூர்வாருதல், ஆற்றுப்படுகைகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் உறுதி செய்தல்.

தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர விசைத்தறி, ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு சீரான மூலப்பொருள் விலை மற்றும் மின்கட்டண சலுகைகள்.

உள்ளாட்சி சுயாட்சி

கிராம ஊராட்சிகளுக்கு முழுமையான அதிகாரப் பரவலாக்கல் மற்றும் உள்ளாட்சித் திட்டங்களுக்கான உடனடி நிதி ஒதுக்கீடுகள்.